*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்மூலிகை ரசம்*
*கபம் சேரவிடாது*
*இருமல் தும்மலை கட்டுப்படுத்தும் ரசம்*
*செய்ய தேவையான பொருள்கள்:*
* புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
* துளசி இலை – 10
* கற்பூரவல்லி இலை – 3
* வெற்றிலை – 2
* கறிவேப்பில்லை – தேவையான அளவு
* கொத்தமல்லி இலை, புதினா – தலா 1 கைப்பிடி
* மஞ்சள் தூள் – சிறிதளவு
* ரசப் பொடி (கடைகளில் கிடைக்கும்) – ஒன்றரை ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் – 5
* கடுகு – தாளிக்க
* வெந்தயம் – தாளிக்க
* பெருங்காயம் – கால் ஸ்பூன்
*மூலிகை ரசம் செய்யும் முறை:*
1. முதலில் புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
2. பின் துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, கொத்தமல்லி இலை, புதினா ஆகியவற்றை நன்றாக கழுவி கொள்ளுங்கள்.
3. வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கழுவி வைத்த துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, கொத்தமல்லி இலை, புதினா ஆகியவற்றை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அது ஆறியதும் அரைத்து கொள்ளவும்.
4. அரைத்த பச்சிலை கலவையை புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. இந்த புளித்தண்ணீருடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ரசப் பொடி அல்லது அரைத்து வைத்த ரசக்கலவை ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து சூடானதும் இறக்கி பரிமாறவும்.
7. ரசத்தை கொதிக்க விட வேண்டாம் ரசம் சூடாகி கொதி நிலைக்கு வரும்போது நீர் தெளித்து இறக்கிவிடவும்.
இப்போது மூலிகை ரசம் தயார். இந்த மூலிகை ரசத்தை நீங்களும் செய்து பாருங்கள்.
* Herbal juice that boosts immunity *
* Rasam that controls cough and sneeze *
* Ingredients to make
* Tamarind – the size of a gooseberry
* Basil Leaf-10
* Camphoravalli Leaf-3
* Betel leaf-2
* no curry – enough
* Coriander Leaf, Mint – 1 Handle each
* Turmeric powder – a little bit
* Rasap powder (available in shops) – one and a half spoon
* Salt – enough
* Oil-2 tsp
* Dried Chilli-5
* mustard – to be tied
* fenugreek – to be stamped
* the wound – foot spoon
* Method of making herbal juice
1. First dissolve tamarind in two and half cups of water and keep it filter.
2. Wash well with basil, camphoravalli leaves, betel leaves, coriander leaves, mint.
Put 3. pan in the oven and pour 1 teaspoon oil and after hot add washed basil, camphoravalli leaves, betel leaves, coriander leaves, mint and saute for 3. minutes and grind once it dries.
4. Add ground green leaf mixture with tamarind water and mix well.
5. Add turmeric powder, enough salt, rasap powder or ground rasakkala to this tamarind water and mix well.
6. In another pan add oil and serve after hot add mustard, fenugreek, dried chilli, dried chili and tamarind water and dissolved in it.
7. Don’t let the rasam boil. When the rasam gets hot, sprinkle water and drop it.
Herbal juice is ready now. You also try this herbal taste.