
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்குடித் திட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். வசிஷ்டேஸ்வரர் கோவில் மூலவாராவார். தாய் உலகநாயகி அம்மை குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து பண்ருட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 36 வழியாக சென்றால் 5 கிமீ தூரத்தில் மணக்கரும்பை – திருகருகாவூர் சாலை குறுக்கிடும். அதிலிருந்து வலது புறமாக மாநில நெடுஞ்சாலை எண் 720ல் பயணித்தால், மொத்தம் 10 கிமீ தூரத்தில் இந்த கோவிலை அடையலாம்.
