சிதம்பர சக்கரம்.

அண்ட அசைவுகளையே அரை நொடிக்கும் கட்டுப்படுத்த கூடிய சிதம்பர சக்கரத்தின் மகா ரகசியத்தை நமது சித்தர்கள் ரகசியம் குழுவில் பார்ப்போம்….
கடந்த வருடம் கார்த்திகை மாதம் உலக நன்மைக்காக இலங்கையில் களுதாவளை மண்ணில் நடைபெட்ற ஏகாதச ருத்ர வேள்வியில் 11கோடி ருத்ர சக்திகளையும் பூஜிப்பதற்காக , பிரதிஷ்டை செய்வதற்காக பிரத்தியேக முறையில் முழுக்க உரிய விதிப்படி கைகளால் வரையப்பட்டு சித்த வேத சிவாகம முறைப்படி முழுக்க முழுக்க தமிழில் பார்த்து பார்த்து வடிவமைத்த ,
உத்தம சித்தர் திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் அருளிய அருளியபிரபஞ்சத்தையே கட்டுப்படுத்த கூடிய திரு அம்பல நாதன் நடராஜரின் #திருஅம்பல #சக்கரம் என்று சொல்லப்படுகின்ற #சிதம்பர #சக்கரம்.
ஓம் சிவாயநம.
திருமந்திர மாலையை இயற்றிய இடையன் மூலன் என்ற திருமூலர் .
சைவத்தில் உள்ள நண்பர்கள்
கண்டிப்பா படித்து கடக்கவும்
ஓம்சிவாயநம.
அம்பலத்துள் ஆனந்தக் கூத்தன் ஆடல் வல்லானின் திருவடிவத்தை மந்திர யந்திர தந்திர வழிபாடுகளால் பலரும் பூசை செய்கின்றனர்.
இந்த மூவகை (சிதம்பர பூசை) முறைகளில் யந்திர வழிபாடு முறையே மிகவும் பயன்றதக்கது என்பது சித்தர் கூற்று .
இப்படி யந்திர வடிவில் சிதம்பர பூசை (திருவம்பல பூசை) காண்பதற்கான யந்திரத்தை அதாவது சக்கரதை அமைத்தவர் திருமூலர். அனாலும் இந்த திருவம்பல சக்கரத்திற்கு முதன் முதலில் வடிவம் கொடுத்து நாதவிந்து மந்திர வித்துக்கள் பதித்து வழிபாடு செய்தவர் பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமிகள் என்று சித்தர்கள் கூற்றிலும் உண்டு.

பழனி முருகனால் வடிவமைக்கப்பட்ட இந்த திருவம்பல சக்கரம் கிரேதாயுகத்தில் பிரமன் வழிபட்டு முக்தி நலம் கண்டார். அதற்கு பிறகு திரேதா யுகத்தில் கவுசிகர் வழிபட்டு முக்தி பேறு கண்டார். இவரை தொடர்ந்து துவாபர யுகத்தில் போகநாதர் வழிபட்டார் என்றும். அவருக்கு பின் கலியுகத்தில் போகநாதரின் சீடர் புலிப்பாணி சித்தர் வழிபட்டு முக்தி பேறு அடைந்துள்ளார் என்பது சித்தர் பாடல்கள் தரும் செய்தியாகும்.
இப்படி ஆளாளுக்கு சிதம்பர சக்ர பூசை செய்து திருவம்பல தரிசனம் செய்திருந்தாலும், இந்த சிதம்பர பூசை முறையை திரும்பல சக்கர ரகசியதை ஏனைய சித்தர்கள் ரகசியமாக மறைத்து வைத்த நிலையில் திருமூலரும் புலிப்பாணி சித்தரும் மட்டுமே வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
தோற்றம் துடியதனில் தோயும்,
திதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம்-
உற்றுமோ ஊன்று மலர்ப்பாதத்தில்
உற்றதிரோதம் முக்தி
நன்றா மலர்ப்பாதத்தே நாடு.
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்,
மறைத்தல்,
அருளால்.
இந்த தத்துவம் ஐந்து
தொழிலின் ஆதாரம் அப்பன் ஈசன்.
ஈசனின் சபைகள் ஐந்து..
சிற்சபை,
கனகசபை,
தேவசபை,
நிருத்தசபை,
இராஜசபை,
இதன் தத்துவம் ஆனந்தம் பேரானந்தம்..
தாண்டவம் ஐந்து.
ஆக்கல் = காளிகா தாண்டவம்
காத்தல்= சந்தியா தாண்டவம்
அழித்தல்= சங்கார தாண்டவம்
மறைத்தல்= திரிபுர தாண்டவம்
அருளால்= ஊர்த்துவ தாண்டவம்
இந்த ஐந்துக்கும் ஆதாரம் அதுதான்
ஆனந்த தாண்டவம்.
என்னில்ல செயல் அனைத்தும் ஒருங்கே உள்ள சிவ சக்கரம்
திருவம்பலச்சக்கரம்.
திருவம்பல சக்கரத்தில் ,
64 சிவ மூர்த்தங்களும் ,
108 சிவ தாண்டவங்களும்,
உறைவதால் இது வெற்றி சக்கரமாக சித்தர்களால் வழிபடப்பட்டுள்ளது .
இந்த சக்கர வழிபாட்டின்;
உறுதியுடன் குடும்பத்தில் சந்தோசம் ஒற்றுமைவும் நிலவும். வீட்டில் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி சகோதரபாசத்துடன் இருப்பார்கள். அதுமட்டும் இல்லை நண்பர்களுக்குள் என்றும் மனக்கசப்பு மற்றும் பிரிவு என்பது வரவே வராது.
இந்ததிருவம்பல சக்கரத்தை வியாபாரம் செய்யுமிடத்தில் வைத்தால், தொழிலாளர்கள் ஒற்றுமை மேலோங்கி முதலாளிக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார்கள். நிறுவனத்தில் உற்பத்தி பெருகும். லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் நம் பேச்சுக்கு
கட்டுப்படுவார்கள். தொழில் போட்டிகளை சுலபமாக சமாளித்து விடலாம் என்று இந்த திருவம்பலச்சக்கரதின் செயல் என்று சித்தர்கள் பாடலில் கூறப்பட்டுள்ளது …
இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.
இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.
மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே.
அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.
அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்
அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்
அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.
அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.
என்ற திருமந்திர பாடல் வரிகளில் திரு அம்பலச் சக்கரம் தயாரிக்கும் முறையை தெளிவாகக் கூறுகிறார் திருமூலர். இந்த பாடல் வரிகளைக் கொண்டு உருவாக்கப் பட்ட திருவம்பல சக்கரத்தின் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.
ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.
இந்த சக்கரத்தை தங்கத் தகட்டில் அல்லது செப்புத்தகட்டில் கீறி தூய இடத்தில் வைத்து தினமும் மாலை வேளைகளில் நமசிவாய என்று 1008 தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு, அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் சொல்லி உருக்கொடுத்தால் இந்த சக்கரம் உயிர் பெற்று தொழிற்படத் தொடங்குமாம்.
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.
இந்த திருஅம்பலச் சக்கரமே பூமி முழுதும் பரந்துள்ளது. இதுவே இறைவன் நடனம் புரியும் பரந்த வெளியிலும் உள்ளது திருஅம்பலச் சக்கரத்தை எமக்கு நந்தி தேவர் அருளினார். தாயிடமிருந்து கன்று பால் எடுப்பது போல திரு நந்தி தேவர் இறைவனிடமிருந்து பெற்று எனக்கு அருளினார்.
திரு அம்பலச் சக்கரத்திற்கு பல செயற்பாடுகள் உண்டு திருவம்பலச் சக்கரதினுள்ளே ஐந்து வகையான குறிகள். ஐந்து வகையான தொழில்கள் உண்டு.
இந்த திருவம்பல சக்கரம் இறைவனின் கூத்தின் வடிவமாக விளங்கும். இதை பூஜிப்பவர்கள் பெறும் பயன்கள் எழுத்தில் அடங்காதவை என்கிறார் திரு மூலர்.
இந்த பெருமையுள்ள திருவம்பலச்சக்கரம் கண்டிப்பா சிவ கடக்ஷ்ம் உள்ளவர்க்கு மட்டும்.
சத்தியம் சாத்தியம்.
மற்றவர்க்கு அசத்தியம் .
ஓம் திருவம்பலச்சக்கரத்தின் தத்துவம் மாறாமல் கையால்.எழுதுவர் இந்தியாவில் / இலங்கையில் மற்றும் உலகில் கூட ஒரு சிலர் மட்டுமே….
இது ஆணவம் அல்ல சிவ நெறியில்
எமது எனக்கு உள்ள அளவிடமுடிய சிவபக்தி….
நூல் ஆதாரம்…
சித்தர்கள் வணங்கிய திருவம்பலச்சக்கரம்.
திருமூலர் அருளிய திருமந்திரம்
சிவகடாக்ஷ்ம் உள்ளவர்க்கு மட்டும் சத்தியம் மற்றவர்க்கு அசத்தியம் …
பாக்கியம் பெற்றவர்கள் மட்டுமே தரிசிக்க கூட முடியும்.
சித்தர்கள் ரகசியம்..